வாட்ஸ்அப் இல் அறிமுகமாகியுள்ள மற்றுமொரு புதிய வசதி!
வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான ஸ்டிக்கர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றுள் விசேட தினங்களுக்கான வாழ்த்துக்களும் அடங்கும்.
இங்கு தரப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை விடவும் நாம் சுயமாக தயாரித்து புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்தவும் முடியும்.
இதற்கு பின்வரும் படிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கூகுள் பிளே ஸ்டோரிற்கு சென்று background eraser எனும் செயலியை தரவிறக்கம் செய்துகொள்ளவும்.
பின்னர் ஸ்டிக்கராக பயன்படுத்தவுள்ள உங்கள் புகைப்படங்கள், செல்ஃபிக்கள் அல்லது வேறு படங்களை தரவிறக்கம் செய்து கைப்பேசியில் சேமிக்கவும்.
background eraser அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தி ஸ்டிக்கராக பயன்படுத்தவுள்ள படங்களின் பின்னணிகளை நீக்கிய பின்னர் சேமிக்கவும்.
இவ்வாறு குறைந்தது 3 ஸ்டிக்கர்களை உருவாக்கவும். அல்லாவிடில் வாட்ஸ்அப் ஆனது குறைந்தளவு ஸ்டிக்கர்களுக்கு சப்போர்ட் ஆகாது.
பின்னர் மீண்டும் பிளே ஸ்டோர் சென்று Personal App for WhatsApp எனும் செயலியை தரவிறக்கம் செய்து நிறுவவும்.
இப்போது குறித்த அப்பிளிக்கேஷனை செயற்படுத்தியதும் நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர்கள் தென்படும். அவற்றிற்கு அருகே உள்ள Add எனும் பொத்தானை அழுத்தவும்.
மீண்டும் காட்சிப்படுத்தப்படும் செய்தியில் (Would you like to add Eraser to WhatsApp) Add பொத்தானை அழுத்தவும்.
இப்போது வாட்ஸ்அப்பின் சட் விண்டோவை திறந்து ஸ்டிக்கர் பகுதிக்கு செல்லவும். அங்கே உங்களால் உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் காண்பிக்கப்படும்.