மகிந்தவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காதது மிக பெரிய தவறு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி பகிரங்கமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்று கொண்ட மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காதது கட்சி செய்யும் மிகப் பெரிய தவறு என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுமதியின்றி அரசாங்கத்தில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காததும் தவறு.
இவர்களுக்கு எதிராக மட்டுமல்ல வேறு கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்று கொண்ட மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்காது மிகப் பெரிய தவறு.
அரசாங்கத்தில் இணையவோ ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த தேவையுமில்லை.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாலாக இருக்கவும் சுதந்திரக் கட்சிக்கு தேவையில்லை எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.