பிரச்சினை இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலக மாட்டோம்!

பிரச்சினை இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலக மாட்டோம்!

ஐக்கிய தேசிய கட்சியின் பின்னணி உறுப்பினர்கள் மத்தியில் எவ்வாறான பிரச்சினைகள் இருந்த போதும் அவர்கள் கட்சியை விட்டு விலகிச் செல்ல மாட்டார்கள் என்று பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் இதுபற்றி மேலும் கூறுகையில்,

“தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு விரிவான கூட்டமைப்பை உருவாக்க உள்ளோம்.

அதன்கீழ் எதிர்வரும் தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தற்போது தயாராகி வருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (வௌ்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க இந்த கருத்தை வௌியிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net