1000 ரூபாய் சம்பளம் எப்போது சாத்தியமாகும்?
பெருந்தோட்டத் தொழிலாளர்கள், பெருந்தோட்ட முகாமைத்துவம், தேயிலை ஏற்றுமதியாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர் என நான்கு பிரிவினரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் சம்பள உயர்வு சாத்தியமாகுமென இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு விடயத்தில் சிக்கல்நிலை காணப்படுகின்றதை சுட்டிக்காட்டிய முரளிதரன், இன்றைய வாழ்க்கைமுறைக்கு தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது அவசியமென வலியுறுத்தினார்.
தொழிலாளர்களுக்கு வருமானம் குறையும் பட்சத்தில் பெருந்தோட்டப்பயிருக்கு அழிவு ஏற்படக்கூடும். அவ்வாறு அழிவு ஏற்படும் போது நாட்டின் பொருளாதாரமும் அழியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மலையக மாணவர்கள் கல்வியில் முன்னேறி தோட்டத்தொழிலுக்கு அப்பால் மாற்றுத்தொழிலுக்கு தம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டார்.
அத்தோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயத்துறையையும் ஊக்குவிக்க தயாராக வேண்டுமென முரளிதரன் வலியுறுத்தியுள்ளார்.