28 நாள் குழந்தையை மண்ணில் புதைத்த தாய் விளக்கமறியலில்

28 நாள் குழந்தையை மண்ணில் புதைத்த தாய் விளக்கமறியலில்

பிறந்து 28நாட்கன சிசுவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயும், தாயின் தாயையும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் ஹட்டன் நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தபட்ட போதே ஹட்டன் நீதவான் ஜோக்சி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

சிசுவின் தாயாரை மனநல வைத்தியரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்யுமாறும் ஹட்டன் நீதவானால் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

ஹட்டன், கொட்டகலை யூனிபில்ட் தோட்ட பகுதியில் (03) காலை 11.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளத.

உயிருடன் குழி தோண்டி புதைத்து விட்டு சற்றுநேரம் கழித்து புதைக்கபட்ட இடத்தில் இருந்து சிசுவை தோண்டி எடுத்துக்கொண்டு, வைத்தியசாலைக்கு சென்று, தனது குழந்தைக்கு தொண்டை பகுதியில் பால் இறுகி இறந்துள்ளதாக கூறியுள்ளார் தாய்.

விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்களும் கைது செய்யபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனக்கும் தனது கணவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இந்த செயலை செய்ததாக சிசுவின் தாய் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

Copyright © 2083 Mukadu · All rights reserved · designed by Speed IT net