எதிர்க் கட்சிகளின் பாரிய கூட்டணி தொடர்பில் அரசாங்கம் அச்சம்!

எதிர்க் கட்சிகளின் பாரிய கூட்டணி தொடர்பில் அரசாங்கம் அச்சம்!

எதிர்க் கட்சிகளின் பாரிய கூட்டணி தொடர்பில் அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. அதனால் அதனை குழப்ப பிரதமர் ரணில் விக்ரமசிங்க சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சிகள் இணைந்து அமைக்கவிருக்கும் கூட்டணி தொடர்பில் அரசாங்கம் அரச்சமடைந்துள்ளது. அதனை எப்படியாவது குழப்பவேண்டும் என்பதற்காக பல்வேறு சதித்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எமது கூட்டணியில் இணையவிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிலரை குழப்பி வருகின்றார்.

அத்துடன் ஊடகங்களும் எமது கூட்டணி தொடர்பாக பாரிய பிரசாரம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றன என அவர் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net