நாட்டுக்கு அவசியமற்ற அரசியலமைப்பு – சுமந்திரனின் கனவு நிறைவேறாது!

நாட்டுக்கு அவசியமற்ற அரசியலமைப்பு – சுமந்திரனின் கனவு நிறைவேறாது!

நாட்டுக்கு பிரயோசனமற்ற அரசியலமைப்பினை உருவாக்க முயற்சிக்கும் சுமந்திரனின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என நாடாளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாட்டுக்கு அவசியமற்ற அரசியலமைப்பினை உருவாக்க முயற்சிக்கும் செயற்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

புதிய அரசியலமைப்பின் வரைபை மட்டுமல்ல அதன் யோசனைகளையும் கடுமையாக நாம் எதிர்ப்போம்.

மேலும் புதிய அரசியலமைப்பினைக் கோரும் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இதுரையில் தமது எதிர்கட்சிப் பதவியை பயன்படுத்தவில்லை” என சேஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net