திருகோணமலையில் அண்ணனை சுட்டுக்கொலை செய்ய முயன்ற தம்பி!

திருகோணமலையில் குடும்ப தகராறு காரணமாக தம்பி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அண்ணன் நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் தோப்பூர், அல்லை நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே. எம். இக்பால் (40 வயது) எனவும் தெரியவருகின்றது.
குடும்ப தகராறு காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்திய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது தப்பியோடி உள்ளார்.
அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.