யுத்தக்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய உள்நாட்டு பொறிமுறை போதுமானது!

யுத்தக்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய உள்நாட்டு பொறிமுறை போதுமானது!

யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தை, நாடுவதனை விடுத்து உள்நாட்டிலேயே அதற்கான விசாரணைகளை மேற்கொண்டு தீர்வை பெற்றுகொள்ள முடியுமென அமைச்சர் அஜித்.பி.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அஜித்.பி.பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“வடக்கு, கிழக்கில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் போர் குற்றங்கள் நடைபெற்றமையை யாராலும் மறுக்க முடியாது. அதேபோன்று தெற்கிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆகையால், இவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இதற்காக சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதை காட்டிலும் உள்நாட்டிலேயே தீர்வை பெற்றுகொள்ள முயற்சிப்பதே சிறந்தது.

இதேவேளை இராஜதந்திர பதவிகளுக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது” எனவும் அஜித் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net