இராஜாங்க சுகாதார அமைச்சரின் இணைப்பு செயலாளர் நியமனம்!

சுகாதார மற்றும் சுதேசிய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் இணைப்பு செயலாளராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அமைச்சில் நேற்று நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, புல்மோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆர்.எம்.அன்வர் இதற்கு முன்னரும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.