35 லட்சம் ரூபாய் கப்பம் பெற்ற இருவர் கைது!

தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அச்சுறுத்தி 35 லட்சம் ரூபாயை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை மிரிஹான பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
27 மற்றும் 31 வயதான சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடுவலை மற்றும் ஹோமாகமை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மிரிஹான விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.