ஐந்தாவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 2 லட்சம் சன்மானம் – ஜப்பான்!

ஐந்தாவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 2 லட்சம் சன்மானம் – ஜப்பான்!

ஜப்பானில் பாரியளவில் வீழ்ச்சி கண்டு வரும் சனத்தொகையை ஒரு நிலைப்படுத்துவதற்காகவும், மக்கள் தொகையைப் பெருக்கும் முயற்சியாகவும், ஐந்தாவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 2 லட்சம் ரூபா பெறுமதியான நிதியுதவி வழங்கப்படும் என்று ஜப்பானிய நகரம் ஒன்றில் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சீனா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிற்கு பெரும் பூதாகரமாக நிலவி வரும் பிரச்சினைகளில் மக்கள் தொகைப் பெருக்கம் பாரிய இடத்தை வகிக்கின்றது.

ஆனால் இதற்கு நேர் எதிராக மக்கள் தொகை குறைந்து வருவதால் ஜப்பான் நாடு பெரும் அதிருப்தியில் உள்ளது. உலகில் உள்ள நாடுகளில் கடந்த 1970 களில் இருந்த மக்கள் தொகையை விட ஜப்பானிலேயே சனத்தொகை சடுதியாக குறைந்து வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சமாகும். ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதரம் மற்றும் தொழிலாளர் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் நாட்டின் ஒட்டுமொத்த சனத்தொகையில், குழந்தைகளின் சதவீதம் 12.3 சதவீதமாகவுள்ளது.

ஆனால் அதுவே இந்தியாவில் 31 சதவீதமும், அமெரிக்காவில் 19 சதவீதமும், சீனாவில் 17 சதவீதமுமாக உள்ளது. தற்போது ஜப்பானின் மக்கள் தொகை 12.7 கோடியாகவுள்ள நிலையில், எதிர்வரும் 2065 ம் ஆண்டில் சுமார் 9 கோடியாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net