//anjeng ஒரு கோடியே 84 இலட்சம் ரூபா கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது! | Mukadu

ஒரு கோடியே 84 இலட்சம் ரூபா கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது!

ஒரு கோடியே 84 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது!

மன்னார் வங்காலை கடற்பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் ஒரு கோடியே 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வங்காலை கடற்பகுதியில் பொதி செய்யப்பட்ட நிலையில் 184 கிலோ 200 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகளுடன் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாப்பொதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வங்காலை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net