மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கருணா!

வடக்கில் இருந்து இராணுவத்தினரை அகற்ற தமிழ் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் இராணுவத்தினர் மீது தமிழ் நம்பிக்கை கொண்டுள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டு கருணா பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
அண்மையில் கிளிநொச்சி – முல்லைத்தீவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினரே ஈடுபட்டனர்.
வடக்கு மக்கள் பாதிக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு உதவியாக இராணுவத்தினரே செயற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே இராணுவத்தினர் போரிட்டனர். தமிழர்களுக்கு எதிராக அவர்கள் போரிடவில்லை.
தற்போது இராணுவத்தினருக்கு எதிராக விக்னேஸ்வரன் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். எனினும் உண்மையான பாதுகாவலர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
விக்னேஸ்வரன் இனவாத கருத்துக்களை வெளியிடும் போது அரசாங்கம் அமைதியாக உள்ளது. எனினும் சாதாரண நபர் ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட்டால் சிறையில் இருக்க நேரிடும் என கருணா மேலும் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினருக்கு ஆதரவாக வடக்கு மக்கள் செயற்படுவதாக கருணா வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக தற்போது மாறியுள்ளது.