ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞனுக்கு பொலிஸ் அதிகாரி செய்த காரியம்!
ஹெல்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் புத்தளம் பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்கள் மூலம் பேசப்படுகிறது.
மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணம் செய்த நபர் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணியாமல் சென்ற நிலையில் பொலிஸ் அதிகாரி ஹெல்மெட்டால் குறித்த இளைஞனின் தலையில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குப் பிறகு, இளைஞர் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.