நாட்டை கட்டியெழுப்ப மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்!

நாட்டை கட்டியெழுப்ப மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்!

நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வருவதே சிறந்ததென பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தொிவித்த அவர்,

“லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரதீப் எக்னலிகொட ஆகிய ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு காரணமானவர்கள் தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளனர்.

அதேபோன்று பேருவளையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு எந்ததொரு விசாரணையும் இதுவரை மேற்கொள்ளாத அரசாங்கம், ஏனைய சாதாரண விடயங்களுக்கு மாத்திரம் குற்றப்புலனாய்வு பிரிவினரை நாடுகின்றது.

நாட்டில் இடம்பெற்ற அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் இந்த அரசாங்கத்தினுள் காணப்படுகின்றமையே அதற்கு காரணம். அதனாலேயே விசாரணைகள் ஒழுங்கான முறையில் நடத்தவில்லை என்பதை எம்மால் உறுதியாக கூற முடியும்.

அந்தவகையில் நாட்டு மக்களுக்கு ஒன்றை கூற விரும்புகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மாத்திரமே இன, மத பேதங்கள் மற்றும் வன்முறைகள் ஆகியவற்றுக்கு இடமளிக்கப்படவில்லை.

நாட்டிற்குள் இலங்கையர் என்ற கோணத்தில் பௌத்தம், முஸ்லிம், கத்தோலிக்கம், இந்து என அனைத்து மதத்தவர்களையும் ஒன்றாக இணைந்து செயற்பட மஹிந்த ஆட்சியினாலேயே முடியும்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 4262 Mukadu · All rights reserved · designed by Speed IT net