புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாது!

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாது என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர், மாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தொிவித்த அவர், புதிய அரசியலமைப்பு யோசனை, அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விவாதங்கள் இடம்பெறவேண்டும்.
அரசியலமைப்பொன்றை எடுத்த எடுப்பில் நிறைவேற்றிவிட முடியாது. இந்த நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இந்த அரசாங்கத்திற்கு இல்லை என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.
அவர்கள் கூட்டமைப்பு, ஜே.வி.பி. உடன் இணைந்தே பெரும்பான்மையைக் காட்டியுள்ளனர். அவர்களை இணைத்துக் கொண்டாலும் அவர்களினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாது. அவர்களுக்கு இன்னும் 20 – 25 பேரின் ஆதரவு தேவையாகவுள்ளது.
எனவே, இந்த அரசியலமைப்பினை ஆராய்ந்து, அதனை நிறைவேற்ற முடியும் என நான் நம்பவில்லை.