அடுக்குமாடி குடியிருப்புகளை மக்களுக்கு கையளிப்பதில் சிக்கல்!

அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு கையளிப்பதில் சில பிரச்சினைகள் காணப்படுவதாக வீடமைப்பு, கலாசார மற்றும் கட்டுமானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் தொடர்பாக (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சஜித் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
“தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமைகளை குடியிருப்பாளர்களுக்கு வழங்க முடியும்.
ஆனால் அடுக்குமாடி தொகுதிகள் அமைந்துள்ள காணிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பில் உள்ளமையால் குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்த யோசனைக்கு அமைவாகவே அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.