சுற்றுலா முகாமுக்கு சென்றிருந்த இந்தியப் பிரஜை பலி
அம்பலாந்தோட்டை, உஸ்ஸன்கொட சுற்றுலா முகாமுக்கு சென்றிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுற்றுலாக் குன்றுக்கு சென்ற இந்தியப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
மணல்வௌியில் விழுந்து கிடந்த குறித்த நபர் அம்பியூலன்ஸ் ஊடாக அம்பலாந்தோட்டை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபரின் பிரேதம் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சுற்றுலா முகாம் கடந்த 09ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், சுமார் 70 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் பங்கெடுத்துள்ளனர்.