ராஜித- சங்கக்காரவுக்கு இடையில் இரகசிய சந்திப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரவுக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சந்திப்பு கடந்த 4 ஆம் திகதி 2 மணித்தியாலங்கள் சுகாதார அமைச்சில் இடம்பெற்றதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு தேவையான சுகாதார செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அமைச்சில் இருந்தவர்களிடம் ராஜித தெரிவித்ததாகவும் அந்த சிங்கள ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து, மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென அரசியல் அவதானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.