சாரதி அனுமதிப்பத்திரம் பெறவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் 25 மாவட்டங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கணினி அடிப்படையிலான சோதனை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆணையாளர் ஏ.கே.கே. ஜகத் சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேராஹிரா கிளை ஏற்கனவே கணினி அடிப்படையிலான பரீட்சைகளை நடத்தத் தொடங்கப்பட்டுள்ளன. இது விரைவில் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.
சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் ஒருவர் கணினி அடிப்படையிலான தேர்வு எதிர்கொள்ள வேண்டும். தேர்வு முடிவுகள் உடனடியாக இயங்கு நிலையில் (online) அறிவிக்கப்படும்.
இதேவேளை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போக்குவரத்து அமைச்சராக இருந்த நிமல் சிறிபால டி சில்வாவினால் கணினி அடிப்படையிலான சாரதி அனுமதிபத்திர பரிசோதனை மையம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.