பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!

பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!

தொழில்ரீதியாக பொலிஸ் அதிகாரிகள் முகம்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தங்களுக்கு அறியப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்குகள் பிரிவு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் 011 2 88 72 38 அல்லது 011 2 88 77 56 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது ஜனாதிபதிக்கு கூறுங்கள் என்ற தகவல் பிரிவின் 011 2 88 74 74 என்ற இலக்கத்திற்கோ அழைத்து தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும்.

அண்மையில் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி செயலணி பிரதானியின் தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மாதம் 24 ஆம் திகதி பத்தரமுல்லை – சுஹூருபாயவில் உள்ள சட்டம் ஒழுங்குகள் தொடர்பான துறையின் வளாகத்தில் பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது. இதில் ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 3492 Mukadu · All rights reserved · designed by Speed IT net