வெளிநாட்டில் வாழும் இலங்கையருக்கு மஹிந்த எச்சரிக்கை!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அல்லது வேறு நாட்டை சேர்ந்தவர்கள், இலங்கையில் செயற்படுவதை அனுமதிக்க முடியாதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
“இன, மதங்களுக்கிடையில் குரோதங்களை உருவாக்கி, நாட்டை பிளவுக்கு உட்படுத்தி எம்மால் ஆட்சி செய்ய முடியாது.
ஆகையால் நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் ஏற்புடையதாகவும் அவர்களை எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்.
மேலும், சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என வேறுபடுத்தாமல். நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் வலுப்படுத்தும் வகையிலான அரசியலமைப்பே தற்போதைய சூழ்நிலைக்கு தேவையாக உள்ளது.
இதேவேளை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நாட்டுக்குள் செயற்படுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என மஹிந்த தெரிவித்துள்ளார்.