2018ஆம் ஆண்டில் வாகன பதிவில் ஏற்பட்ட மாற்றம்!

கடந்த ஆண்டு மொத்தமாக 480,799 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 29,146 வாகனங்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டு மொத்தம் 451,653 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த ஆண்டு 1000CC க்கும் குறைவான குதிரை வலுகொண்ட 64,159 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
80,776 மோட்டார் கார்களும், 18,883 முச்சக்கர வண்டிகளும், 339,763 மோட்டார் சைக்கிள்களும், 2,957 பேருந்துகளும் 2018ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.