பாரதியின் வரிகளை சுட்டிக்காட்டி தைப்பொங்கல் வாழ்த்து கூறிய மைத்திரி!
“தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரும் உறுதியான நம்பிக்கையாகும்.
அந்த நம்பிக்கை கைக்கூடும் வகையில் மலர்ந்திருக்கும் இந்த புத்தாண்டு அவர்களின் எதிர்ப்பார்புகள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமையட்டும்”
தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையிலான வலிமையான உறவினை மென்மேலும் மெருகூட்டும் வகையிலும் தமிழ் கலை, கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையிலும், தைத்திருநாளை கொண்டாடும் அனைத்து தமிழ் மக்களுக்கம் தைத்திருநாள் நல்வாழ்த்துகளை கூறிக்கொள்கின்றேன்.
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என மகாகவி பாரதி பாடியதிலிருந்து தமிழர்கள் உழவு தொழிலுக்கு எத்தனை முன்னுரிமை கொடுத்துள்ளார்கள் என்பதை உணரமுடிகின்றது.
கமத்தை பிரதான வாழ்வாதாரமாக கொண்டு இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையையே அவர்கள் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் இது புலப்படுத்துகின்றது” என அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.