இலங்கையில் பாரிய குற்றச்செயல்களின் பின்னணியில் யார்?

பாதாள உலகக் குழுக்கள் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என அரசாங்கத்திடம், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றின் ஊடாக அவர் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பாதாள உலகக்குழுக்களை சில அரசிலய்வாதிகளே பாதுகாக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதாள உலகக்குழுச் சந்தேக நபர்கள் தொடர்பில் காவல்துறையினர் இதனை விடவும் கவனம் செலுத்த முனைப்பு காட்ட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காவல்துறையின் சிலரும் பாதாள உலகக்குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள் என்றே தென்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு கேரள கஞ்சா போதைப்பொருள் பாரியளவில் தருவிக்கப்படுவதாகவும், சந்தேக நபர்களை சில அரசியல்வாதிகள் மீட்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.