விமல் வீரவன்ச நீதிமன்றத்தை அவமதித்தார்!

விமல் வீரவன்ச நீதிமன்றத்தை அவமதித்தார்!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மீது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதியன்று அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பிலேயே இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் பல்வேறு சமயப்பிரிவுகளின் இருப்பிமாகியுள்ளது என்று அவர் நாடாளுமன்ற விவாதத்தின்போது தெரிவித்திருந்தார்.

அரசியல் அமைப்பு சபை, நீதியரசர்களுக்கான ஒப்புதலை வழங்கியமை தொடர்பிலேயே அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.

இந்தநிலையில் குறித்த கருத்து தொடர்பில் விமல் வீரவன்சவின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யமுடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net