குஜராத்தில் காற்றாடி நூல் அறுத்து 5 பேர் உயிரிழப்பு!

குஜராத்தில் காற்றாடி நூல் அறுத்து 5 பேர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலத்தில் காற்றாடி நூல் அறுத்து 8 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளதாக குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் காற்றாடித் திருவிழா நடந்துவருகின்ற நிலையில், அம்மாநிலத்தின் மேசானா பகுதியில் சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவனின் கழுத்தை மாஞ்சா தடவிய காற்றாடி நூல் அறுத்ததில் குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இதேபோல் காற்றாடி நூல் அறுத்து மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், அகமதாபாத், சூரத், ராஜ்கோட் உள்ளிட்ட பல இடங்களில் 90 பேர்வரையில் படுகாயம் அடைந்துள்ளனர்.

கண்ணாடித் தூள் மற்றும் பல இரசாயனப் பதார்த்தங்கள் சேர்த்து காற்றாடி நூலின் மீது பூசப்பட்டு தயாரிக்கப்படும் மாஞ்சா எனப்படும் நூல் மிகவும் ஆபத்தானது என்பதுடன் நச்சுத்தன்மை மிக்கது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net