நாடு பிளவுபட ஐ.தே.க. இடமளிக்காது!

நாடு பிளவுபட ஐ.தே.க. இடமளிக்காது!

நாட்டை இரண்டாக பிளவுபட ஐக்கிய தேசிய கட்சி ஒரு காலமும் இடமளிக்காதென அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு 2002 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் எந்தவொரு குற்றத்திற்கும் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு அனுமதியளிக்கவில்லை.

அதன்காரணமாகவே தற்பொழுதும் எந்தவொரு குற்றவாளிக்கும் சர்வதேச தண்டனை கிடைப்பதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net