நாட்டுக்கு நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் தேவை!

எதிர்காலத்தில் எழும் சவால்களை எதிர்நோக்குவதற்கு ஒரு நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் தேவை என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கரந்தெனிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தற்போது நாடாளுமன்றத்திலோ அல்லது எந்த அரசியல் கட்சிகளோ பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. எனவே, மக்களிடம் இருந்து புதிய உத்தரவை அரசாங்கம் தேட வேண்டும் என்று அவர் கூறினார்.
தற்பொழுது, குற்றம் விகிதம் துரிதமாக அதிகரித்துள்ளதாகவும் அதே நேரத்தில் போதை மருந்து பாவனையானது எதிர்கால தலைமுறையை அளிக்கும் அச்சுறுத்தலாகவும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வளமான நாட்டை உருவாக்க ஒரு நிலையான அரசாங்கம் தேவை என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.