நெருக்கடிக்கு தீர்வாக பொது தேர்தலை உடன் நடத்துவதே சிறந்தது!

நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பொது தேர்தலை உடன் நடத்துவதே சிறந்தது என கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் விரைவாக முதலில் மாகாண சபை தேர்தலை நடத்த இந்த அரசாங்கம் முன்வரவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அந்தவகையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஒரு புதிய நிறைவேற்று ஜனாதிபதி நியமிக்கப்பட முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் உட்பட பிற தேர்தல்கள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
நாடாளுமன்றம் அரச நிதியைப் பொறுப்பேற்றுள்ளது என்றும் ஆனால் நாடாளுமன்றத்தில் ஒரு புதிய வேலைத்திட்டத்தை கொண்டுவராமல் நிதி நெருக்கடி தீர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.