பிரித்தானிய பெண் சொல்லும் ரகசியம்!

பிரித்தானிய பெண் சொல்லும் ரகசியம்!

பிரித்தானியாவில் 6 மாதத்தில் பெண் ஒருவர் 31 கிலோ எடையை குறைத்து பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளார். பிரித்தானியாவின் மான்செஸ்டர் Tameside பகுதியைச் சேர்ந்தவர் Laura-Beth(32).

செவிலியரான இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் அவர் 6 மாதங்களில் 30 கிலோ எடையை குறைத்து காண்பித்துள்ளார்.

இது குறித்து பிரபல ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், உடல் எடை அதிகரிப்பால் சற்று வேதனையடைந்து வந்த Laura-Beth எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது தான் அவர் Slimpod app என்பதை பயன்படுத்தியுள்ளார். அதில் உடல் எடையை குறைப்பது எப்படி என்று ஒவ்வொரு நாளும் கவனித்து வந்துள்ளார்.

இதற்காக அவர் நாள் ஒன்றிற்கு வெறும் ஒன்பது நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கியதாக கூறப்படுகிறது. Laura-Beth-க்கு குழந்தை ஒன்று உள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், பல முறை நான் எடையை குறைப்பதற்கு முயற்சி செய்து வந்தேன். 12 வருடங்களுக்கு முன்பு சாதரணமாகவே இருந்தேன்.

அதன் பின் அளவுக்கு மீறிய உணவு பழக்கம் என் எடையை அதிகரித்துவிட்டது என்று கூறலாம். குறிப்பாக நான் கட்பரி டயரி மில்க், நொறுக்கு தீனிகள் அதிகம் சாப்பிடுவேன், என்னால் அதை நிறுத்த முடியவில்லை.

அதன் பின்பு Slimpod app பயன்படுத்த ஆரம்பித்தேன். அதில் சத்துமிக்க உணவுப்பொருட்களை எப்படி சாப்பிடவேண்டும்? தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற டயட் இருந்தது என்று கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net