அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் கைது!

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் கைது!

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் ஆஜராகாத காரணத்தால் நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன்பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரதி மேயர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net