பிலிப்பைன்ஸூடன் இலங்கை 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்து!

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் (புதன்கிழமை) குறித்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்குமிடையில், கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பொருளாதரம், கல்வி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினருக்கு பிலிப்பைன்ஸ் வர்த்தக முதலீட்டு அமைச்சர் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் மனிலா நகரின் நிநோயி அகினோ சர்வதேச விமானத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் மணிலா நகரில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகம் மற்றும் லொஸ் பெனோஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹினோ நாகா ஓனாளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.