கல்வி அமைச்சினால் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கான உதவிகள்

கல்வி அமைச்சினால் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் 8432 பேருக்கு பாடசாலை சீருடை மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாடசாலை ரீதியாக இனம் காணப்பட்டு அவர்களிற்கான இந்த கற்றல் உதவிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று பிற்பகல் கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் 2437 மாணவர்களிற்கான குறித்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதேபோன்று தர்மபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்வாறு பாடசாலை மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது, குறித்த நிகழ்வு இன்று பகல் 1 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர், கிளிநொச்சி வய கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி பணிப்பாளர் அதிபர் ஆசிரியர், பாடசாலைகளிலிருந்து அழைக்கப்பட்ட மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய விஜயகலா குறிப்பிடுகையில்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு கடந்த அரசாங்கத்திலும் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை எனவும், அவர்களிற்கு உதவிகள் வழங்க பல தடவை கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்வி செயற்பாடுகள், ஆசிரியர் பற்றாக்குறைகள் தொடர்பிலும் அவர் இதன்போது தெரிவித்திருந்ததார்.

இதேவளை பல பாசாலைகளில் வகுப்பறை கட்டடங்கள், தளபாட பற்றாக்குறை உள்ளிட்டவை நிலவுவதாகவும் தெரிவித்தார்.

அடுத்து வரும் மாதங்களில் 1500 ஆசிரியர்களிற்கு ஆசிரிய நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net