கொழும்பு – கட்டுநாயக்க பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

கொழும்பு – கட்டுநாயக்க பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஊழியர்களே இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இ.போ.ச. பேருந்தொன்றின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் பயணிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடடுநாயக்க விமான நிலையத்திற்கு பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.