சிறீதரன் எம்.பியின் சிபாரிசில் வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, முகாவில் மல்வில் கிருஷ்ணர் ஆலய வீதி புனரமைக்கும் பணி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சிபாரிசில் கம்பரலிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
புனரமைப்பு பணிகள் வட்டார பிரதேச சபை உறுப்பினர் அருட்செல்வியின் வேண்டுகோளிற்கு அமைவாக சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் நேற்று மாலை சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உபதவிசாளர் கஜன், உறுப்பினர் ரமேஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொது அமைப்பினர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.