புதிய அரசியலமைப்பிற்கு கூட்டமைப்பு பூரண ஆதரவு

புதிய அரசியலமைப்பிற்கு கூட்டமைப்பு பூரண ஆதரவு

அரசியல் அமைப்பு பேரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து கண்டி மல்வத்து, அஸ்கிரி மஹாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மஹாநாயக்கர்களை இன்று கண்டியில் சந்தித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விளக்கத்தினை கொடுத்தார்.

உத்தேச புதிய அரசியல் அமைப்பில் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்போ அல்லது சமஷ்டி நிர்வாக முறையோ தொடர்பில் எதுவித விடயங்களும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இலங்கையின் சரித்திரத்தில் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் புதிய அரசியல் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. அந்த சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல் கட்சிகள், அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்கேற்கவில்லை.

தற்போது நாட்டில் சரித்திரத்தில் முதல் தடவையாக அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இன்று காலை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மஹா நாயக்க தேரர்களை சந்தித்து, ஆசீர்வாதங்களை பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net