சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்துக்கு மைத்திரியின் பெயர்!
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகமொன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை வைப்பதற்கு பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விவசாயத்துறைக்கு, ஜனாதிபதி ஆற்றிய சேவையை பாராட்டும் பொருட்டு அவரின் பெயரை வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கான நினைவுப் பலகையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (வெள்ளிக்கிழமை) திரைநீக்கம் செய்துள்ளார்.
இதேவேளை சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையில் பாரிய செயற்றிட்டமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.