முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்கவுள்ள சந்திரிக்கா!


முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்கவுள்ள சந்திரிக்கா!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 12 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மாவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 6 பேரில் 4 பேரும் புதிய அணியுடன் இணையவுள்ளனர்.

பியசேன கமகே மற்றும் லக்ஷமன் செனவிரத்ன ஆகிய உறுப்பினர்கள் இருவரும் நேரடியாக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு தீர்மாளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகும் குழுவிற்கு தலைமைத்துவம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்குள் நுழையவுள்ளார்.

அதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

அதன் போது அமைச்சு பதவிகள அதிகரித்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு முக்கிய அமைச்சு பதவி ஒன்றை வழங்குவதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net