வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் அறுவர் பலி!
வென்னப்புவ – நைனாமடம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 03.15 மணியளவில் சம்பவித்துள்ளது.
கார் ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த மூவரில், இருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், மற்றையவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.