அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த பெண் மீது தாக்குதல்!
இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்க பெண்ணொருவர் மீது மற்றுமொரு வெளிநாட்டவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அஹங்கம பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலிய பிரஜை ஒருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்க பெண் அஹங்கம பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான இஸ்ரேல் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
விருந்து ஒன்றின் போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.