ஜனாதிபதியாகும் முயற்சியில் ரணிலுக்கும், சஜித்திற்கும் இடையில் மோதல்!

ஜனாதிபதியாகும் முயற்சியில் ரணிலுக்கும், சஜித்திற்கும் இடையில் தீவிர மோதல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அந்த கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான மோதல் மிக தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

உடுகம்பொலயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்த எந்தவொரு உறுப்பினருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதியமைச்சர் பதவியேனும் வழங்கவில்லை.

இதனால் பிரதமர் ரணில் மற்றும் சஜித்திற்கு இடையில் இன்று மோதல் தீவிரமடைந்துள்ளது. இது பொருளாதாரத்தையும் அதிகளவில் பாதிப்படையச் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ஜனாதிபதிக் கனவை நனவாக்கிக் கொள்ள பாரிய பிரயத்தனங்களைச் செய்து வருவதாகவும் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 6805 Mukadu · All rights reserved · designed by Speed IT net