//anjeng இமானின் இசையில் கனடா பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துப்பாடல்! | Mukadu

இமானின் இசையில் கனடா பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துப்பாடல்!

இமானின் இசையில் கனடா பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துப்பாடல்!

இசையமைப்பாளர் இமானின் இசையில் கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக வாழ்த்துப்பாடல் ஒன்று உருவாக்கப்பட்டவுள்ளது.

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிக்காக இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளும் நிதி திரட்டலும் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்று வந்தன.

அதன்படி அமையவுள்ள தமிழ் இருக்கைக்கான தமிழ்தாய் வாழ்த்துப்பாடலுக்கு திரைப்பட இசை அமைப்பாளர் இமான் இசையமைக்க உள்ளதுடன், கனடா தமிழ் காங்கிரஸ் சார்பில் இமானுக்கு, ‘மாற்றத்திற்கான தலைவர் விருது’ வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக டி.இமான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த வாய்ப்பை வழங்கிய கனடா தமிழ் அமைப்புக்கு நன்றி.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு இசை அமைப்பது பெருமையாக உள்ளது. வாழ்க தமிழ்’ என பதிவிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net