சகோதரனின் மனைவி குறித்து நாமல் எம்.பியின் பெருமிதம்!

சகோதரனின் மனைவி குறித்து நாமல் எம்.பியின் பெருமிதம்!

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச, தனது நீண்டநாள் காதலியான டட்யானாவுடன் திருமண பந்தத்தில் இணைந்துக் கொண்டார்.

இவர்களின் திருமணம் தொடர்பான ரோஹித்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்து குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

“ நீ எனது சகோதரன் மட்டுமல்ல நண்பன். எனக்கு பிரச்சினைகள் வந்த நேரத்தில் என் அருகில் இருந்தாய். சில பிரச்சினைகளின் போது நாம் வலுவாக இருந்தோம்.

சிறிய வயதில் இருந்து நாம் ஒன்றாக றகர் விளையாடினோம். நாம் பல அனுபவங்களை கொண்டுள்ளோம்.

எமது சகோதரத்துவம் பிரிவிக்க முடியாத வகையில் வலுவாக உள்ளது. எம்மை பிரிக்க முடியாது.

திருமணம் செய்ய நீ, சிறந்த பெண்ணை தெரிவு செய்துள்ளாய், இதனை விட சிறந்த பெண் எனது தம்பிக்கு கிடைப்பார் என எண்ணிப்பார்க்க முடியாது. டட்யானா தங்கையை எமது குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

எமது குடும்பத்துடன் அதிஷ்டமான சகோதரி ஒருவர் இணைந்துக்கொண்டமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைக்கின்றேன்” என நாமல் ராஜபக்ச தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 0773 Mukadu · All rights reserved · designed by Speed IT net