சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்திரி
சிங்கப்பூருக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் அம்மையாருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு சிங்கப்பூர் இஸ்தானா மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை சார்ந்த நிறுவன தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையாற்றுவதற்காக ஜனாதிபதி சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.