இருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி!
போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவருக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக நீதி அமைச்சினால் நேற்றையதினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மரண தண்டனைக்கு உள்ளானவர்களின் பெயர் விவரம் குறித்தும் அவர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுகுறித்த ஆவணங்களை, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளரிடம் கையளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.