மஹிந்த அணியினர் இனவாதத்தை தூண்டுகின்றனர்!

மஹிந்த அணியினர் இனவாதத்தை தூண்டுகின்றனர்!

மஹிந்த ஆதரவு எதிரணியினர் நாட்டில் இனவாதத்தை தொடர்ச்சியாக பரப்பி வருவதாக கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஆயத்தங்களையும் ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“புதிய அரசியலமைப்பினால் நாடு பிளவடையும் என கூறுகிறார்கள். இது முற்றிலும் பொய்யான ஒரு கருத்தாகும். எந்தவொரு அரசியல்வாதியும் தனது நாடு பிளவடைவதைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார். அவ்வாறு இருக்கும்போது ஏன் பொய்யான தகவல்களை ஊடகங்கள் வாயிலாக பரப்ப வேண்டும்?

அதையும் மீறி, புதிய அரசியலமைப்பினால் நாடு பிளவடையும் என கூறும் தரப்பினர், தாராளமாக நிபுணர்களுடன் பகிரங்கமாக ஊடக விவாதமொன்றுக்கு செல்லலாம்.

தற்போது அரசியலமைப்பு தொடர்பான வரைபொன்றுக்கூட வரவில்லை. இந்தநிலையிலேயே தேவையில்லாத இனவாதத்தை எதிரணியினர் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான இனவாதத்தினாலே ஜனாதிபதித் தேர்தலுக்கும் அந்த தரப்பினர் உடனடியாக சென்றார்கள்“ என்று கொழும்பு மாநகரசபை மேயர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net