நெடுங்குளம் 300 ஏக்கர் காணி அரசாங்கத்தால் சுவீகரிப்பு – மக்கள் விசனம்!

நெடுங்குளம் 300 ஏக்கர் காணி அரசாங்கத்தால் சுவீகரிப்பு – மக்கள் விசனம்!

யாழ்ப்பாணம் – நெடுங்குளம் பகுதியில் 300 ஏக்கர் பரப்புக் காணியை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கை அதிகாரிகளால் கைவிடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இந்தப் பகுதியில் உள்ள 3000 ஏக்கர் காணி அதாவது 300 பரப்புக் காணியை சுவீகரிக்கப் போவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால் காணி சுவீகரிப்பு சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத காணியை சுவீகரிக்கவுள்ளதால், காணி உரிமையாளர்கள் இருந்தால், உடனடியாக பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுவீகரிப்பு சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளமையினால், காணி உரிமையாளர்கள், காணி உரிமத்திற்குரிய ஆவணங்களைக் கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது காணி சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, யாரும் உரிமை கோர முடியாது, என்றும் அந்தப் பகுதியில் உள்ள 89 பரப்பு காணியை கொண்ட உரிமையாளரை பிரதேச செயலாளர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல்களை மீறியும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து காணி சுவீகரிப்புத் தொடர்பாக தெரிவித்த பின்னரும், பிரதேச செயலாளர் மிரட்டும் தொனியில் அப்பகுதி மக்களுடன் காணி சுவீகரிப்போம்.

சுவீகரிப்பில் தலையிடக் கூடாது என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தமது காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கமாட்டோம் மீறி சுவீகரித்தால், சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து தடுப்போம் என்று கூறியதை தொடர்ந்து, அதிகாரிகளால் காணி அளப்பதை நிறுத்திவிட்டு, பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றினைத் தருமாறும் கோரியுள்ளனர்.

குறித்த போராட்டத்தில், யாழ்.மாநகர பிரதி முதல்வர் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டு, தமது கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 9930 Mukadu · All rights reserved · designed by Speed IT net