அக்கரைப்பற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

அக்கரைப்பற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு முதலாம் பிரிவிற்குட்பட்ட வயற் பகுதியில் இன்று 26 தூக்கில் தொங்கி நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டதாக அக்கரைப்ற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பிரதேசத்தினைச் சேர்ந்த அஷ்ரப்கான் பரீன் என்னும் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கிண்ணியாப் பிரதேசத்தினைச் சேர்ந்த இவர் தமது குடும்பஸ்தர்களுடன் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்புப் பகுதியில் உள்ள தமது உறவினரினரின் வீட்டுக்கு கடந்த ஒரு வார காலத்திற்கு முன்னர் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று(25) இரவு ஒன்பது மணியளவில் தமது உறவினர் வீட்டில் உணவருந்திய இவர் வீட்டை விட்டு வெளியேறியவர் இன்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாருமற்ற வயற் பிரதேசத்தில் தூக்கில் தொங்கியதைக் கண்ட பிரதேச பொதுமக்கள் பொலிஸாரிடம் விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி கே.சமீம் சடலத்தினைப் பார்வையிட்டதன் பின்னர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உடவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் அக்கரைப்ற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net